குமரியில் மேலும் 81 பேருக்கு கொரோனா தொற்று - கட்டுப்பாட்டை கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கு அதிகாரி வேண்டுகோள்!

குமரியில் மேலும் 81 பேருக்கு கொரோனா தொற்று - கட்டுப்பாட்டை கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கு அதிகாரி வேண்டுகோள்!

in News / Local

குமரி மாவட்டத்தில் மேலும் 81 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 764 ஆக உயர்ந்து இருக்கிறது.

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 683 ஆக இருந்தது. இந்த நிலையில் மாவட்டத்தில் மேலும் 81 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:-

பாகோடு பகுதியை சேர்ந்த 31 வயது ஆண், இருளப்பபுரம் பகுதியை சேர்ந்த 34 வயது ஆண், வில்லுக்குறி பகுதியை சேர்ந்த 62 வயது ஆண், குருந்தன்கோடு பகுதியை சேர்ந்த 5 வயது சிறுவன், ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்த 65 வயது ஆண், கோட்டார் பகுதியை சேர்ந்த 26 வயது ஆண், சுசீந்திரம் பகுதியை சேர்ந்த 38 வயது பெண், மணிக்கட்டிபொட்டல் பகுதியை சேர்ந்த 32 வயது ஆண், சாந்தபுரம் பகுதியை சேர்ந்த 36 வயது பெண், சுண்டபற்றிவிளை பகுதியை சேர்ந்த 34 வயது ஆண் மற்றும் 64 வயது பெண், ஈத்தாமொழி பகுதியை சேர்ந்த 26 வயது ஆண், திப்பிலான்விளை பகுதியை சேர்ந்த 28 வயது பெண், கீரிவிளை பகுதியை சேர்ந்த 90 வயது பெண், 23 வயது பெண், 27 வயது ஆண், 51 வயது பெண், வடசேரி காமராஜபுரம் பகுதியை சேர்ந்த 56 வயது ஆண், 26 வயது ஆண், 27 வயது பெண், கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்த 32 வயது ஆண், நாகர்கோவில் ஹென்றிரோடு பகுதியை சேர்ந்த 51 வயது ஆண், 56 வயது பெண், 30 வயது பெண், பெருவிளை பகுதியை சேர்ந்த 24 வயது ஆண், 55 வயது பெண், 58 வயது ஆண், ஏசுவடியான்தெரு பகுதியை சேர்ந்த 55 வயது பெண், மரச்சீனிவிளை பகுதியை சேர்ந்த 37 வயது ஆண் உள்பட மொத்தம் 81 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட 81 பேரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் நேற்று மாலை நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 764 ஆக உயர்ந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் உச்சபட்சமாக 81 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க அரசு பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். பொதுமக்கள் முககவசம் அணிதல், சமூக இடைவெளி கடை பிடித்தல் போன்றவை மூலம் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top