கொரோனா உலகமக்களை மட்டுமல்ல ஆட்சியாளர்களையும் ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது ஹெச்.வசந்தகுமார் MP

கொரோனா உலகமக்களை மட்டுமல்ல ஆட்சியாளர்களையும் ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது ஹெச்.வசந்தகுமார் MP

in News / Local

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஹெச்.வசந்தகுமார் அவர்கள் கூறியதாவது:-

கொரோனா என்ற வைரஸ் உலகமக்களை மட்டுமல்ல ஆட்சியாளர்களையும் ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. முகக்கவசங்களை வாங்கும் போது சரியான அளவில் வாங்குவதோடு நிறுத்தி கொள்ளாமல் சுத்தம் செய்து முகக்கவசங்களை அணிய வேண்டும் ஏதோ ஒன்றை கடமைக்காக அணியாமல் நீங்கள் தரமான சுத்தமானதை வாங்கி அணிந்து கொண்டால் தான் கொரோனாவை ஒழிக்க முடியும்.

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர். ஹச்.வசந்தகுமார் அவர்கள்நாம் இருக்கும் இடம் மட்டுமல்ல நாம் பயன்படுத்தும் பொருள்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ளும் நேரமிது என்று கூறியுள்ளார்.

கொரோனா சோதனை கருவி ரேபிட் ஹிட் கொரோனா வந்த பிறகு தான் நாம் தேடுகிறோம் அதுவும் சரியான கொரோனா சோதனை அறியும் கருவிகளை வாங்கினால் நோய் தொற்று உள்ளவர்களும் தொற்று இல்லாதவர்களும் இடையே நோய் பாதிப்பும் குளறுபடி ஏற்படாது.

யாரோ சீனாவில் விற்பனை செய்யவதற்காக நாமே அதை வாங்கி திருப்தி இல்லாமல் திரும்ப ஒப்படைத்தோம். இந்தியாவின் சிறந்த வல்லுநர்கள் கொண்டு இந்த நோய் தொற்று கண்டறிவதுக்கு சோதனை கருவிகளும் நோய் தொற்று குணமடைய செய்வதற்கு மருந்துகளும் கண்டுப்பிடிக்க மத்திய அரசும் மாநில அரசும் முயற்சி செய்ய வேண்டும்.

தற்போது உள்ள சூழ்நிலையில் எல்லோரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அரசு மட்டுமல்ல ஒவ்வொரு இந்தியனும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நாமும் முகக்கவசம் அணிந்து கையுறை அணிந்து எல்லோரும் ஒன்று சேர்ந்து நடைமுறை படுத்தினால் தான் கொரோனாவை அழிக்க முடியும் தேவையில்லாமல் வெளியே சுற்றுவதை, கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

அதிக அளவில் முகக்கவசங்கள் வெளியே விற்பனைக்கு வந்துள்ளன. நல்லது ஆனாலும் முகக்கவசங்களை வாங்கும் போது சரியான அளவில் வாங்குவதோடு நிறுத்தி கொள்ளாமல் சுத்தம் செய்து முகக்கவசங்களை அணிய வேண்டும் ஏதோ ஒன்றை கடமைக்காக அணியாமல் நீங்கள் தரமானதை சுத்தமானதை வாங்கி அணிந்து கொண்டால் தான் கொரோனாவை ஒழிக்க முடியும் என்று உறுதிபடக் கூறினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top