கன்னியாகுமரி மாவட்டத்தில்  ஊரடங்கு குறித்து மாவட்ட ஆட்சியர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கு குறித்து மாவட்ட ஆட்சியர்

in News / Local

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் தமிழக அரசின் அறிவிப்பின்படி ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் 31.08.2020 நள்ளிரவு 12 மணி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

02.08.2020, 09.08.2020, 16.08.2020 23.08.2020 மற்றும் 30.08.2020 ஆகிய ஞாயிற்று கிழமைகளில் அரசு அறிவிப்பின்படி முழு ஊரடங்கு எந்தவிதமான தளர்வுகளும் இன்றி கன்னியாகுமரி மாவட்டத்தில் அமல் படுத்தப்படும்.

அரசு அறிவிப்பின்படி கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து 31.08.2020 முடிய தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது மாவட்டத்திற்குள் இ-பாஸ் இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கப்படும்

வெளிமாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரவும்,
மாவட்டங்களுக்கிடையே சென்று வரவும், இ பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடைகள் அனைத்தும் (மருந்து கடைகள் தவிர) வழக்கம் போல காலை 6 மாரி முதல் மாலை 05 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும். பொதுமக்களும், வணிக
பெருமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

உலவகங்கள் ஏற்கனவே உள்ள நடைமுறைகளின்படி காலை 06 மணி முதல் இரவு 7 மணி வரை 50% இருக்கைகளில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்தவும் இரவு 9 மணி வரை பார்சல் சேவை வழங்கவும் அனுமதி வழங்கப்படுகிறது.

- மாவட்ட ஆட்சியர்
கன்னியாகுமரி மாவட்டம்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top