குமரி மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திருநங்கை வேட்பாளருக்கு கொலை மிரட்டல்!

குமரி மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திருநங்கை வேட்பாளருக்கு கொலை மிரட்டல்!

in News / Local

குமரி மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் சகாய நகர் ஊராட்சி தலைவர் பதவிக்கு நான் (திருநங்கை ராபியா) போட்டியிடுகிறேன். தோ்தலில் போட்டியிடுவது தொடர்பாக மர்மநபர்கள் சிலர் எனது வீட்டிற்கு வந்து கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.

நான் பிரசாரம் செய்யும் பகுதிகளிலும் மிரட்டல்கள் வருகிறது. எனவே எனக்கும், என்னை சார்ந்தவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல்கள் ஏற்படுவதால், போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும் மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அவர் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

திருநங்கை ராபியாவுக்கு துணையாக திருநங்கைகள் சுதா, பியூட்டி, நந்தினி, பாரதி கண்ணம்மா ஆகியோரும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர்.

முன்னதாக அவர்கள் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்துக்கு இது தொடர்பாக புகார் மனு அளிக்க சென்றனர். ஆனால் கலெக்டர் இ்ல்லாத காரணத்தால் அவர்கள் திரும்பி சென்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top