நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை முடிவு தாமதமாக கிடைப்பதாக நோயாளிகள் புகார் தெரிவித்தனர்.
கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் அதிதீவிரமாக பரவி வரும் நிலையில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் முதல் வயதானவர்கள் என கன்னியாகுமரி மாவட்டத்தில் தாமாக முன்வந்து பலர் கொரோனா பரிசோதனை செய்வதோடு, தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சளி பரிசோதனை செய்யப்பட்ட நபர்களின் கொரோனா முடிவு உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டது.ஆனால் தற்போது கொரோனா வேகமாக பரவிவருவதால் சோதனை செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் பரிசோதனை செய்யப்பட்டு மூன்று நாட்களாகியும் தகவல் தெரிவிப்பதில் காலதாமதம் ஏற்படுவதோடு, சான்றிதழ் தராமல் அலைக்களிக்க வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் உடல் நலகுறைவால் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு அறுவைசிகிச்சைக்கு தயாராக உள்ள நிலையில் கொரோனா பரிசோதனை சான்றிதழ் இருந்தால் தான் அறுவை சிகிச்சை செய்யமுடியும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.ஆனால் கொரோனா ரிப்போர்ட் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதால் அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.
மேலும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் இரண்டாவது டோஸ் ஊசி போட சொன்ன நாளில் அங்கு சென்றால் தடுப்பூசி இல்லை என்று நாளை வாருங்கள் என்று கூறுவதால் தடுப்பூசி போட வரும் நபர்கள் நாங்கள் வேலைக்கு விடுமுறை அளித்து விட்டு வருகிறோம் என்பதால் ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கும் நோயாளிகளுக்கும் வாக்கு வாதம் ஏற்படுகிறது.எனவே போதிய மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை முடிவை விரைவாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 Comments