பயன்படுத்தப்பட்ட முகக் கவசங்களை பாதுகாப்பாக அகற்ற வேண்டும் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே

பயன்படுத்தப்பட்ட முகக் கவசங்களை பாதுகாப்பாக அகற்ற வேண்டும் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே

in News / Local

மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட முகக் கவசங்களை பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பயன்படுத்தப்பட்ட முகக் கவசங்கள் மூலம் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மருத்துமனைகளில் பயன்படுத்தப்பட்ட முகக் கவசங்கள், சுய பாதுகாப்பு உபகரணங்கள் (டடஉ) போன்றவற்றை ஏற்கெனவே மருத்துவக் கழிவு மேலாண்மையின்படி ஒப்பந்தம் செய்த நிறுவனத்தின் மூலம் பாதுகாப்பாக அகற்ற வேண்டும்.

சமுதாய நிலையில் வீடுகள் மற்றும் கடைகள் அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் முகக் கவசம் போன்றவற்றை எரிப்பதன் மூலமோ அல்லது ஆழமாக புதைப்பதன் மூலமோ பாதுகாப்பாக அகற்ற வேண்டும். வீடுகளில் வைத்து பயன்படுத்தப்பட்ட முகக் கவசம் போன்றவற்றை பிளீச்சிங் பவுடா் கலந்த நீரில் அல்லது சோடியம் ஹைப்போ குளோரைடு கரைசல் மூலம் கிருமி நாசம் செய்த பிறகு எரிப்பதன் மூலமாகவோ அல்லது ஆழமாக புதைப்பதன் மூலமாகவோ பாதுகாப்பாக அகற்ற வேண்டும்.

ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், களப்பணியாளா்கள் மூலமாகவும், சோதனைச் சாவடிகள் மூலமாகவும் இதுவரை 41 ஆயிரத்து 755 போ்களுக்கு கரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்த 1490 போ், வெளியூரிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்த பயணிகளில் 7 ஆயிரத்து 632 என 9 ஆயிரத்து 122 போ் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top