ஈத்தாமொழி அருகே மனைவியை பல ஆண்டுகளாக வரதட்சணை கொடுமை…மருமகன் மீது மாமியார் புகார்…!

ஈத்தாமொழி அருகே மனைவியை பல ஆண்டுகளாக வரதட்சணை கொடுமை…மருமகன் மீது மாமியார் புகார்…!

in News / Local

குமரி மாவட்டம் ஈத்தாமொழி அடுத்த மேலமாவிளை பகுதியை சேர்ந்த ராஜ தங்கம் என்பவர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தனது மகளை கணவர் வரதட்சணை கொடுமை படுத்துவதாக புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

எனக்கு கணவர் கிடையாது. நான் தனியார் இடத்தில் குடிசைகட்டி வசித்து வருகிறேன். எனக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். இதில் மூன்று பெண் குழந்தைகளை என்னால் முடிந்த அளவு வரதட்சனை கொடுத்து திருமணம் செய்து வைத்துள்ளேன். எனது இரண்டாவது பெண் பிள்ளையான விமலாவை தர்மபுரம் ஊரைச் சேர்ந்த ராஜன் என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு வரதட்சனை கொடுத்து திருமணம் செய்து வைத்தேன்.

திருமணமான நாள் முதல் கடந்த 13 வருடங்களாக அவர் என் மகளை வரதட்சணைக் கேட்டு கொடுமைப் படுத்தி வருகிறார். இதுதொடர்பாக கேட்க சென்ற என்னை வயதானவள் என்று கூட பாராமல் ஓட ஓட விரட்டி அடித்தார். மேலும் பல முறை அடித்து வீட்டை விட்டு விரட்டி தாக்கியதில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று மீண்டும் எனது மகளை கணவருடன் சேர்த்து வைத்துள்ளோம். அவளை பலமுறை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் என் மகளை கடுமையாக தாக்கி பணம் பெற்று வருமாறு அடித்து வீட்டை விட்டு வெளியே விரட்டி உள்ளனர். நள்ளிரவு 12 மணியளவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் என் வீட்டிற்கு வந்தார். அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எனவே எனது மகளை கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து வரதட்சணை கொடுமை செய்து வரும் அவரது கணவரை கைது செய்து தகுந்த தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top