நிலத்தடி நீர்மட்டம் உயர தங்கள் சொந்த செலவில் பொதுப்பணித்துறை கால்வாயை தூர்வாரிய திமுகஒன்றியசெயலாளர்திருஎன்தாமரைபாரதி மற்றும் தலக்குளம் புரவுதலைவர் பேராசிரியர் டி.சி.மகேஷ்

நிலத்தடி நீர்மட்டம் உயர தங்கள் சொந்த செலவில் பொதுப்பணித்துறை கால்வாயை தூர்வாரிய திமுகஒன்றியசெயலாளர்திருஎன்தாமரைபாரதி மற்றும் தலக்குளம் புரவுதலைவர் பேராசிரியர் டி.சி.மகேஷ்

in News / Local

கன்னியாகுமரி கடைவரம்பு பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் நாஞ்சில்நாடு புத்தனாறு கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் சாமிதோப்பு ஊராட்சி, கரும்பாட்டூர் ஊராட்சி, தென்தாமரைகுளம் பேரூராட்சி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆஸ்டின் எம்எல்ஏ மற்றும் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் திரு.என்.தாமரைபாரதி ஆகியோரின் தொடர் முயற்சியால் கன்னியாகுமரியை அடுத்த பொற்றையடியில் இருந்து தலக்குளம் வரை செல்லும் வெங்கலராஜன் கோட்டை சானல் வழியாக தென்தாமரைகுளம் தெப்பக்குளம் வரை தண்ணீர் கொண்டு வரப்பட்டது.அங்கிருந்து தலக்குளம் வரைசெல்லும் இந்த சானலின் மறுகால் தூர்வாரப்படாமல் இருந்தது. இந்த கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு செல்லும் போது தென்தாமரைகுளம் பேரூராட்சிக்குட்பட்ட தென்தாமரைகுளம் தேங்காய்காரன் குடியிருப்பு, பூவியூர், பொன்னார்விளை, எட்டுகூட்டு தேரிவிளை ஆகிய பகுதிகளில் நீர்மட்டம் உயரும் என்பதால் மறுகால் பகுதியில் தூர்வாரும் பணி தொடங்கியது.

இப்பணியை பொன்னார்விளை பகுதியில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் திரு.என்.தாமரைபாரதி, தலக்குளம் புரவுதலைவர்் பேராசிரியர் டி.சி.மகேஷ், ஆகியோர் தொடங்கி வைத்தனர்..

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top