தென்னிந்தியாவின் புகழ்பெற்ற காளிமலை காளியம்மன் சித்ரா பவுர்ணமி விழா.! காணி இன மக்களால் நடத்தப்பட்ட இரவு நேர விஷேச பூஜை;

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற காளிமலை காளியம்மன் சித்ரா பவுர்ணமி விழா.! காணி இன மக்களால் நடத்தப்பட்ட இரவு நேர விஷேச பூஜை;

in News / Local

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அடுத்துள்ள காளிமலை காளியம்மன் கோவில் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற புனிதத் ஸ்தலமாக விளங்குகிறது.இந்த காளிமலை கடல் மட்டத்தில் இருந்து 3500கி.மீ உயரம் கொண்டது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.

இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் தங்களது வீடுகளிலேயே பொங்கலிட்டு வணங்குமாறு காளிமலை டிரஸ்ட் அறிவுறுத்தியது. இதனைத் தொடர்ந்து நேற்று குமரி மாவட்டம் முழுவதும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இன்று அதிகாலை தங்களது வீடுகளில் காளியம்மன் புகைப்படத்தை வைத்து பொங்கலிட்டு வழிபட்டனர்.அதேபோல் நேற்றிரவு காளிமலையில் காணி இன மக்களால் அங்கு விஷேச பூஜை நடந்தது.இதில் காணி இன மக்கள் பலர் பங்கேற்று காளி அம்மனை வழிபட்டனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top