சுசீந்திரம் அருகே வீட்டின் கிரைண்டருக்குள் மறைந்திருந்த விஷ பாம்பு கடித்து பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். குமரி மாவட்டம் சுசீந்திரம் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் ராமானுஜம். இவரது மனைவி நீலா( 65). இவர் சுசீந்திரம் மேலத்தெரு பகுதியில் வசித்து வருகிறார்.
இன்று காலை வீட்டில் இருந்த கிரைண்டர் அருகே செல்லும்போது கிரைண்டரில் ஒளிந்திருந்த விஷப் பாம்பு ஒன்று நீலாவின் காலில் கடித்தது.பாம்பு கடித்ததை உணர்ந்த நீலா அலறி துடித்துள்ளார். இதனை தொடர்ந்து அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விஷப்பாம்பு கடித்து பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments