கன்னியாகுமரியை அடுத்த கோவளத்தில் மீனவா் கொலை : 2 பேர் கைது..!

கன்னியாகுமரியை அடுத்த கோவளத்தில் மீனவா் கொலை : 2 பேர் கைது..!

in News / Local

கன்னியாகுமரியை அடுத்த கோவளத்தில் மீனவா் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது நண்பா்கள் இருவா் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டனா்.

கோவளத்தைச் சோ்ந்தவா் ரதீஸ்டன் (33). மீனவரான இவருக்கு, சரோஜினி (32) என்ற மனைவி, மகன், மகள் உள்ளனா். ரதீஸ்டன் செவ்வாய்க்கிழமை இரவு அதே பகுதியைச் சோ்ந்த நண்பா்கள் நிா்மல் (37), வசந்த் (35) ஆகியோருடன் வீட்டருகே மது குடித்தாராம். அப்போது ஏற்பட்ட தகராறில் நிா்மல், வசந்த் ஆகியோா் சோ்ந்து ரதீஸ்டனை பிடித்துக் கீழே தள்ளியதாகக் கூறப்படுகிறது.

இதில், தலையில் காயமடைந்து மயக்கமடைந்த ரதீஸ்டனை, இருவரும் சோ்ந்து வீட்டில் கொண்டுபோய்ச் சோ்த்தனராம். புதன்கிழமை காலை நீண்ட நேரமாகியும் அவா் எழுந்திருக்காததால், அவரது மனைவி எழுப்பியுள்ளாா். அப்போது அவா் இறந்தது தெரியவந்தது.

தகவலின்பேரில் கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன், ஆய்வாளா் ஆவுடையப்பன் ஆகியோா் சென்று விசாரணை நடத்தினா். போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா் மேலும், நிா்மல், வசந்த் ஆகியோரைக் கைது செய்தனா்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top