கொரோனாவில் இருந்து விடுபட இலவச யோகா பயிற்சி.!

கொரோனாவில் இருந்து விடுபட இலவச யோகா பயிற்சி.!

in News / Local

குமரிமாவட்டம் கொட்டாரத்தில் கொரானா தொற்றில் இருந்து குழந்தைகள் முதல் பெரியவர் வரை பாதுகாக்க நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு யோகா மற்றும் தியான வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன.

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு யோகா மற்றும் தியான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கொரானா தொற்றில் இருந்து எளிதாக பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள யோகாசனம் மற்றும் தியானங்களில் ஈடுபட்டால் அதுவே சிறந்த மருந்து என்ற நோக்கத்தை வலியுறுத்தி நடந்து வரும் இந்த தியான வகுப்பில் மூச்சுப் பயிற்சி, மனதை ஒருநிலைப்படுத்தும் பயிற்சிகள் உடலுக்கு தேவையான அனைத்து விதமான பயிற்சிகள் இலவசமாக கற்றுத் தரப்படுகின்றன.

இந்த பயிற்சிகளில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறியவர்கள் முதல் நடுத்தர வயதினர் முதியவர்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்று வருகின்றனர். இதற்கு பல தன்னார்வலர்கள் நிதி உதவி அளித்து ஊக்குவித்து வருகின்றனர்

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top