குமரிமாவட்டம் கோட்டார் காவல்நிலைய உதவி ஆய்வாளரின் மனித நேயம்

குமரிமாவட்டம் கோட்டார் காவல்நிலைய உதவி ஆய்வாளரின் மனித நேயம்

in News / Local

குமரிமாவட்டம் நாகர்கோவில் கோட்டார் காவல் நிலைய உதவி ஆய்வாளர்.திரு.சரவணகுமார் அவர்கள் ஆதரவற்ற மக்களுக்கு தொடர்ந்து இலவசமாக உணவு வழங்கி வருகிறார்…
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கான இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் சாலை ஓரங்களிலும்,பேருந்து நிலையங்களிலும் வாழும் ஆதரவற்றோருக்கு உணவு கிடைப்பதில்லை அதனால் முழு ஊரடங்கு நாள்களிலும் தொடர்ந்து தவறாமல் கோட்டார் காவல் நிலைய ஆய்வாளர்.திரு.செந்தில் குமார் அவர்களுடன் இணைந்து உதவி ஆய்வாளர்.சரவணகுமார் அவர்கள் மதிய உணவை வழங்கி வந்தார்.ஆனால் ஆய்வாளர் திரு.செந்தில் குமார் அவர்கள் கொரோன தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.இந்நிலையில் கூட அந்த பணியை தொடர்ந்து செய்து வருகிறார் உதவி ஆய்வாளர்.திரு.சரவணகுமார் இன்று நாகர்கோவில் பகுதிகளில் உள்ள 200 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற நபர்களுக்கு மதிய உணவை வழங்கியுள்ளார்…இதை பார்த்த தன்னார்வலர்கள் உதவி ஆய்வாளர்.திரு.சரவணகுமார் அவர்களை பாராட்டி வருகின்றனர்…

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top