ஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைப்பதில் போலீஸ் தில்லுமுல்லு எஸ்.பி.அதிரடி நடவடிக்கை

ஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைப்பதில் போலீஸ் தில்லுமுல்லு எஸ்.பி.அதிரடி நடவடிக்கை

in News / Local

குமரிமாவட்ட எஸ்.பி.உயர்திரு.பத்ரி நாராயணன் அவர்கள் குமரிமாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற உடன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும்நிலையில் பொதுமக்களின் நலன்கருதி கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில் காவல்துறையினர் குமரி மாவட்டத்தில தடையை மீறி வாகனத்தில் சாலையில் அநாவசியமாக ஊர் சுற்றியவர்களை பிடித்து அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை 8616 வழக்குகளும் 6343 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு திடீரென பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பித்ததை.தொடர்ந்து குமரிமாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி வந்தவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க அந்தந்த காவல் நிலையத்திற்கு எஸ்.பி அவர்கள் உத்தரவை பிறப்பித்தார். இதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள 33 போலீஸ் நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணி நடைப்பெற்றது.

குமரிமாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் உள்ள பறிமுதல் வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வந்த நிலையில்
மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களில் உரியவர்களுக்கு வழங்க தவறியதாக புகார்கள் வந்துள்ளதாக எழுந்த தகவலின் அடிப்படையில் எஸ்.பி அவர்கள் விசாரணை நடத்தினர். அதில் மார்த்தாண்டம் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 284 வாகனங்கள் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன நிலையில் உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணியில்

இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம் போஸ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் மற்றும் 3 போலீசார் ஈடுபட்டனர். மார்த்தாண்டம் போலீஸ்நிலையத்தில் வாகனங்கள் வழங்கியதில் குளறுபடி நடந்ததாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் அவர்களுக்கு தெரியவந்தன.

இதையடுத்து இது சம்பந்தமாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அவர் உத்தரவிட்டார்.

அதன் பேரில் தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச் சந்திரன் விசாரணை மேற்கொண்டார்.அதில் 8 இரு சக்கர வாகனங்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் முறைகேடாக வேறு நபர்களுக்கு வழங்கியது உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு கவனத்திற்கு கொண்டு சென்று அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம் போஸ், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் ,ஏட்டு சுனில்குமார் , போலீஸ்காரர் விக்டர் உள்பட 5 போலீசாரை ஆயுதப்படைக்கு மாற்றி போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவிட்டார். முழுமையான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும் அவர்கள் 5பேர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது .

இதுகுறித்து மாவட்ட போலீஸ் பிரண்டு பத்ரி நாராயணன் அவர்கள் ஊரடங்கின் போது பறி முதல் செய்யப்பட்ட வாகனங்களை ஒப்படைப்பதில் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் குளறுபடி நடந்ததாக புகார்கள் வந்தன அதன் பேரில் விசாரணை நடத்தி அறிக்கல் தாக்கல் செய்ய துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரனுக்கு உத்தரவிடப்பட்டது .

விசாரணை நடத்திய அவர் முதல்கட்ட விசாரணை அறிக்கை வழங்கியுள்ளார் அதன் பேரில் இன்ஸ்பெக்டர் , சப் – இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர் . முழு விசாரணை அறிக்கை வந்ததும் , அதில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் தவறு யார் செய்திருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை பாயும் . இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்….

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top