குமரி பெண் டாக்டர் சென்ற அழகு நிலையம், சூப்பர் மார்க்கெட் மூடல் உரிமையாளர்களுக்கு தொற்று பரிசோதனை

குமரி பெண் டாக்டர் சென்ற அழகு நிலையம், சூப்பர் மார்க்கெட் மூடல் உரிமையாளர்களுக்கு தொற்று பரிசோதனை

in News / Local

குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை 424 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ஏற்கனவே அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளின் டாக்டர்கள் 3 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் மேலும் ஒரு தனியார் ஆஸ்பத்திரி பெண் டாக்டர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.அவர் அதே தனியார் ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் டாக்டர் சிகிச்சை பெற்று வரும் கட்டிடம் தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. அவருடன் பணியாற்றிய 2 டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனைக்கான சளி மாதிரிகள் சேகரித்து அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள பெண் டாக்டர் ஆஸ்பத்திரி அருகில் உள்ள ஒரு அழகு நிலையத்துக்கும், சூப்பர் மார்க்கெட்டுக்கும் சென்று வந்துள்ளார். இதனால் அந்த அழகு நிலையத்திலும், சூப்பர் மார்க்கெட்டிலும் கிருமி நாசினி தெளித்து மூடப்பட்டது. அழகு நிலைய உரிமையாளர், சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனைக்கான சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே நேற்று காலை நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் அந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார். மருத்துவமனை நிர்வாகிகளிடமும் விவரங்களை கேட்டறிந்தார்.

ஆய்வின் போது அவருடன் நகர்நல அதிகாரி கின்சால், சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் ஆகியோர் சென்றிருந்தனர். மேலும் அந்த ஆஸ்பத்திரியின் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. பிளச்சிங் பவுடரும் தூவப்பட்டது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top