நாகர்கோவில் காசி வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவு…
இளம்பெண்களை காதலிப்பது போல் நடித்து பாலியல் உறவு கொண்டு அதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பி பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நாகர்கோவில் காசி மற்றும் அவரது தந்தை தங்கபாண்டியன் இருவர் மீதான வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் தடைவித்துள்ளது.
காசி தரப்பில் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்ததாவது. என் தரப்பு வாதங்களை முன் வைக்க முடியவில்லை எனக்காக வாதாட எந்த வழக்கறிஞர்களும் வரவில்லை ஆகவே ஒரு தரப்பு வாதத்தை வைத்து விசாரணை நடத்துவதும்,என் தரப்புக்கு சட்ட உதவி இல்லாமல் இருப்பதால் என் மீதான வழக்கு விசாரணையை விசாரித்து தீர்ப்பு வழங்குவது நியாயமற்றது.அது நீதி உரிமைக்கு எதிரானது.எனது வழக்குகளை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் அது வரை விசாரணைக்கு தடைவிதித்து உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் காசி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த காசி வழக்கு மிதான மனு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி.ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் முன் விசாரணையில் காசி, தங்கப்பாண்டியன் இருவர் மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
0 Comments