குமரியை மிரட்டும் கொரானா : ஒரேநாளில் பாதிப்பு 561.,பலி எண்ணிக்கை 11.. அதிர்ச்சியில் பொதுமக்கள்

குமரியை மிரட்டும் கொரானா : ஒரேநாளில் பாதிப்பு 561.,பலி எண்ணிக்கை 11.. அதிர்ச்சியில் பொதுமக்கள்

in News / Local

குமரிமாவட்டத்தில் ஒரேநாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 561 ஆக அதிகரித்ததோடு 11பேர் பலியானதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

நாடுமுழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிர் பலியும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் பொதுஊரடங்கு மற்றும் கட்டுபாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாளை முதல் (6ம்தேதி)மேலும் புதிய கட்டுபாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமுல்படுத்த பட உள்ள நிலையில், கொரோனாவை கட்டுபடுத்த இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின்,கோவிஷீல்ட் ஆகிய இரு கொரோனா தடுப்பூசிகள் கடந்த ஜனவரி மாதம் 16 ம் தேதி முதல் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது.முதலில் துய்மைபணியாளர்கள், டாக்டர்கள் ஆகிய முன்கள பணியாளர்களுக்கும், தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், தற்போது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு போடப்பட்டு வருகிறது.

வரும் மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்துள்ளது.அதிகபட்சமாக நேற்று முன்தினம் 561 பாதிப்படைந்த நிலையில் 11 பேர் பலியாயினர்.கொரோனா பரவலை கட்டுபடுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரத் துறையின் தீவிர முயற்சிக்கு மத்தியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top