அகில இந்திய அளவிலான இரும்பு மனிதன் போட்டியில் குமரி வீரர் சாதனை!

அகில இந்திய அளவிலான இரும்பு மனிதன் போட்டியில் குமரி வீரர் சாதனை!

in News / Local

பஞ்சாப் இரும்பு மனிதன் அசோசியேஷன் என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய அளவிலான இரும்பு மனிதன் போட்டியை நடத்தி வருகிறது. 2020-ம் ஆண்டுக்கான இரும்பு மனிதன் போட்டி பஞ்சாப்பில் நடந்தது. இதில் இந்தியா முழுவதும் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு லாக் பிரஸ், யோக்ரே, பார்மஸ் வாக், சண்பேக் கிரே, டயர் கிளிப் ஆகிய உடல் வலுவை காட்டும் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த தாமரைகுட்டிவிளையை சேர்ந்த தங்கதுரை என்பவரது மகன் கண்ணன் கலந்து கொண்டார். இந்த போட்டிகளில் அகில இந்திய அளவில் 3-வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்து கண்ணன் சாதனை படைத்தார். அவருக்கு இரும்பு மனிதன் பட்டத்தையும், பதக்கத்தையும், பஞ்சாப் இரும்பு மனிதன் அசோசியேஷன் என்ற அமைப்பு வழங்கி உள்ளது.

சாதனை படைத்த குமரி வீரர் கண்ணனை, குமரி மாவட்ட உடல் வலு சங்க செயலாளர் சரவண சுப்பையா பரிசு வழங்கி பாராட்டினார்.

சாதனை குறித்து கண்ணன் கூறுகையில், இன்னும் ஏராளமான பட்டங்களையும், பதக்கங்களையும் பெற்று குமரி மாவட்டத்துக்கு பெருமை சேர்ப்பேன் என்று பெருமிதத்துடன் கூறினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top