குமரி எஸ்.பி.அதிரடி ..ஒரே நாளில் சட்டவிரோதமாக மதுவிற்ற 50 பேர் கைது.!

குமரி எஸ்.பி.அதிரடி ..ஒரே நாளில் சட்டவிரோதமாக மதுவிற்ற 50 பேர் கைது.!

in News / Local

குமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்ற 50- பேர் இன்று ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.குமரிமாவட்ட எஸ்.பி.பத்ரி நாராயணன் போதை பொருட்களான கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில் மாவட்டத்தில் அனுமதியில்லாமல் மது விற்பனை நடைபெறுவதை தடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து இன்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் போலீசாரால் அதிரடி சோதனை நடைபெற்றது. இதில் 50 பேர் மீது 49 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வைத்திருந்த 1126 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top