குமரி மாவட்டத்தில் கோர்ட்டை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்!

குமரி மாவட்டத்தில் கோர்ட்டை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்!

in News / Local

தமிழகத்தில் நீதிபதி தேர்வு எழுதுபவர்களுக்கு, தமிழ் தெரிந்திருக்க வேண்டியது இல்லை என்ற டி.என்.பி.எஸ்.சி.யின் அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும். புதிதாக தேர்வு செய்யப்படும் நீதிபதிகள் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் வக்கீலாக பணியாற்றி இருக்க வேண்டும் என்ற விதிமுறையை உருவாக்க வேண்டும் என்பது உள்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு-புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஒரு நாள் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே போல் குமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம், இரணியல், பூதப்பாண்டி ஆகிய கோர்ட்டுகளிலும் வக்கீல்களும் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவிலில் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து விட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வக்கீல் சங்க தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயகுமார், பொருளாளர் நாகராஜன், துணை செயலாளர் கோடீஸ்வரன், மகேஷ், சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் குழித்துறை கோர்ட்டை புறக்கணித்து வெளியே வந்த வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் சங்க தலைவர் சுரேஷ், செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top