பருத்திக்காட்டுவிளை அருகே ஆற்றில் காயங்களுடன் மிதந்து வந்த ஆண் சடலம் சடலத்தை கைப்பற்றி தக்கலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பருத்திக்காட்டுவிளை அருகே புங்கறை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் முகத்தில் காயங்களுடன் மிதந்து வந்தது. இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் அந்த சடலத்தை அணை போட்டு தடுத்து தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு தக்கலை டி.எஸ்.பி ராமச்சந்திரன் தலையில் வந்த போலீசார் அந்த சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த சுற்றுவட்டார பொதுமக்களிடம் அவரது புகைப்படத்தை வைத்து விசாரணை நடத்தியதில் அவர் நங்கச்சிவிளை என்ற பகுதியை சேர்ந்த 57-வயதான செல்வராஜ் என்பதும் இவருக்கு கழிந்த 30-வருடங்களுக்கு முன் திருமணமாகி 20-வருடத்திற்கு முன் மனைவி கைவிட்ட நிலையில் வீடில்லாமல் கவனிப்பாரின்றி மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் சுற்றி திறிந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து முகத்தில் படுகாயங்களுடன் இருந்த சடலத்தை மீட்ட போலீசார், அவர் ஆற்றில் தவறி விழுந்து இறந்தாரா இல்லை யாராவது அடித்து கொன்று ஆற்றில் வீசியிருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தக்கலை டி.எஸ்.பி. ராமச்சந்திரன் கூறுகையில் சந்தேக மரணமாக வழக்கு செய்துள்ளதாகவும் உடற்கூறு அறிக்கைக்கு பின்புதான் முழு விபரம் தெரிய வரும் எனவும் கூறினார்.
0 Comments