மார்ஷல் நேசமணி 53 வது ஆண்டு நினைவு தினம்.! அமைச்சர் மனோ தங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்;

மார்ஷல் நேசமணி 53 வது ஆண்டு நினைவு தினம்.! அமைச்சர் மனோ தங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்;

in News / Local

கன்னியாகுமரி:

குமரியின் தந்தை என்றழைக்கப்படும் மார்சல் நேசமணி 53 வது நினைவு தினத்தையொட்டி நாகர்கோவிலில் அவரது உருவச்சிலைக்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .

குமரி மாவட்டம் கேரளாவில் இருந்து பிரிந்து தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.இதற்கு முக்கிய பங்காற்றியவர் மார்ஷல் நேசமணி ஆவார்.இதனால் அவரை குமரியின் தந்தை என்று அழைக்கப்பட்டது.மார்ஷல் நேசமணியின் 53 -வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.

நினைவு தினத்தலயொட்டி நாகர்கோவில் நேசமணி நினைவு மணிமண்டபத்தில் உள்ள அவரது வெங்கலசிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமை வகித்தார்.இதில் மார்ஷல் நேசமணி யின் பேரன் ரெஞ்சித் அப்பல்லோஸ் ,கன்னியாகுமரி தொகுதி எம்.பி விஜய் வசந்த், எம்.எல்.ஏக்கள்- விஜயதரணி ,தளவாய் சுந்தரம் மற்றும் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் ,அதிமுக மாவட்டச் சொயலாளர் எஸ்.ஏ.அசோகன் ,காங்.மாவட்ட தலைவர் வக்கீல்.ராதாகிருஷ்ணன் ,திமுக இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் வக்கீல். சிவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top