பஞ்சாயத்து அலுவலகத்தில் உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்

பஞ்சாயத்து அலுவலகத்தில் உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்

in News / Local

விளாத்துறை பஞ்சாயத்து அலுவலகத்தில் உறுப்பினர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கடை அருகே விளாத்துறை கிராம பஞ்சாயத்து மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய தாமிரபரணி ஆற்றில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது கோடை காலமானதால் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் நிதியில் இருந்து மேலும் ஒரு குடிநீர் கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

அந்த கிணறு அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் பல பகுதிகளிலும் இருந்தும் வரும் கழிவுகள் கலப்பதாக கூறப்படுகிறது. எனவே, அந்த பகுதியில் குடிநீர் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், சீராக குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தியும் வார்டு உறுப்பினர் விஜயகுமார் தலைமையில் உறுப்பினர்கள் செல்லத்துரை, சதீஷ், பாபு, புஷ்ப மேரி, லட்சுமி ஆகியோர் பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அவர்களிடம் பஞ்சாயத்து தலைவி ஓமனா பேச்சுவார்த்தை நடத்தி சீரான குடிநீர் வினியோகம் வழங்கப்படும் என்றும், உறுப்பினர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றும் கூறினார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த சம்பவம் அங்கு திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top