கருங்கலில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான கல்குவாரியை மூடகேட்டு 500 க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு!

கருங்கலில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான கல்குவாரியை மூடகேட்டு 500 க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு!

in News / Local

குமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்குமார், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் மனோ தங்கராஜ் தலைமையில் 500 க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

குமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி செயல்படுகிறது. இந்த கல்குவாரியின் சுற்றுவட்டார பகுதிகளான தாரத்தட்டு, ஈத்தங்காடு ,கப்பியறை வாழ்வச்சகோஷ்டம், முருங்காவிளை, திப்பிறமலை, தாராதட்டு, பள்ளத்துவிளை, இடைமலை கோணம் ஆகிய பத்து ஊர்களை சுற்றிலும் ஏராளமான மலைகள் உள்ளன. இந்த பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த மலைகளில் கல் உடைக்கும் கிரசர்கள் அமைக்கப்பட்டு அதிகமான கற்கள் பாறைகள் உடைக்கப்பட்டு வருகின்றன. பத்து அடிக்கும் மேல் குழி தோண்டி எலக்டிரிக்கல் வெடிவைத்து தினமும் குறையாமல் 1500 லோடு கற்கள் கேரளாவிற்கு கடத்தபடுகிறது. கல்குவாரி அமைந்துள்ள பகுதியின் அருகில் 500க்கும் மேற்பட்ட வீடுகளும், கிராமச் சாலைகள், குளங்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், வழிபாட்டுத் தலங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த பகுதியில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள்.

குவாரிகளில் இயந்திரங்களும் செயல்படும்போது கழிவு நீரானது பொதுமக்கள் பயன்படுத்தும் குளங்களை மாசு படுத்தி வருகிறது. அந்த பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் கல் குவாரிகளால் விரிசல் ஏற்பட்டு இடியும் நிலையில் உள்ளது. எனவே அந்த குவாரிகளையும் கிரசர்களையும் உடனடியாக தடை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top