கேரள கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனித பாதுகாப்பு கழகத்தினர் ஆர்ப்பாட்டம்!

கேரள கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனித பாதுகாப்பு கழகத்தினர் ஆர்ப்பாட்டம்!

in News / Local

குமரி மாவட்ட மனித பாதுகாப்பு கழகம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

கேரளாவில் இருந்து கோழி, ஆடு, மாடு மற்றும் மருத்துவ கழிவுகளை வாகனங்கள் மூலமாக தமிழகத்திற்கு,அதுவும் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வந்து, இங்குள்ள ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் கொட்டப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதனை தடுக்க மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு துணை தலைவர் மகாதேவன் தலைமை தாங்கினார். நிறுவன தலைவர் ஜெய்மோகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, “கேரளாவில் இருந்து தினந்தோறும் ஆடு, மாடு, கோழி மற்றும் மருத்துவ கழிவுகளை வாகனங்களில் கொண்டு வந்து குமரி மாவட்ட நீர் நிலைகளில் கொட்டுகிறார்கள். இதனால் தண்ணீர் மாசுபட்டு துர்நாற்றம் வீசுகிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தும் மக்களுக்கு அறியப்படாத நோய்கள் வருகின்றன. கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கக்கோரி போராட்டங்கள் நடத்தியும், மாவட்ட நிர்வாகத்துக்கு மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இனியாவது இச்செயலை தடுக்க வேண்டும்“ என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் உஷா, செயலாளர் ஜாண் வின்சென்ட்ராஜ், இணை செயலாளர் ராமசாமிபிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top