பல மொழி கற்பேன் போடா - குமரியில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவல்!

பல மொழி கற்பேன் போடா - குமரியில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவல்!

in News / Local

இந்தி மொழிக்கு ஆதரவாக "பலமொழி கற்பேன் போடா" எனும் வாசகம் பொருந்திய டீசர்ட் மற்றும் சட்டை அணிந்திருப்பது போல் குமரி பா.ஜ.க நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த சில தினங்களாக "நான் தமிழ் பேசும் இந்தியன்" மற்றும் ஹிந்தி வேண்டாம் என்னும் வாசகம் பொருந்தி டீ-சர்ட் அணிந்து திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் ஒருசில அரசியல் பிரமுகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர்.

இந்நிலையில் குமரி மாவட்டத்தில் இன்று ஏராளமான பா.ஜ.க நிர்வாகிகள் ,தொண்டர்கள் இந்தி மொழிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் "பலமொழி கற்பேன் போடா" எனும் வாசகம் பொறித்த டீ-சர்ட் அணிந்திருப்பது போல் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

குமரி பா.ஜ.க தொழில் பிரிவு மாவட்டச் செயலாளர் சி.எஸ்.சுபாஷ் உட்பட ஏராளமான பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் இச்செயல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top