நாகர்கோவிலில் கணவன் மனைவி சண்டையில் வீட்டில் நின்ற இரண்டு கார்களை தீ வைத்து எரித்த கணவன்!

நாகர்கோவிலில் கணவன் மனைவி சண்டையில் வீட்டில் நின்ற இரண்டு கார்களை தீ வைத்து எரித்த கணவன்!

in News / Local

நாகர்கோவிலில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவனை பிரிந்து தன் பெற்றோர் வீட்டில் வாழ்ந்துவரும் மனைவியின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த விலை உயர்ந்த 30 லட்சம் மதிப்புள்ள இரண்டு சொகுசு கார்களை கணவன் பெட்ரோல் ஊற்றி இரண்டு கார்களுக்கும் தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசாரிபள்ளம் போலீசார் கணவனை கைது செய்து விசாரணை.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் யூஜின் மரிய ஸ்டாலின். 37 வயதாகும் இவர் வெளிநாட்டில் சில ஆண்டுகளாக என்ஜினியராக பணிபுரிந்து வந்த நிலையில், சமீபகாலமாக வேலை இன்றி சொந்த ஊரில் உள்ளார். 8 ஆண்டுகளுக்கு முன்பு ஹோலி கிராஸ் நகர் பகுதியை சேர்ந்த ஹேசில்டா மேரி (33) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இத்தம்பதிக்கு இதுவரை குழந்தைகள் இல்லை. இந்நிலையில் இத்தம்பதியினருக்கிடையே அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதோடு விவாகரத்துக்கான சட்டரீதியிலான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவில் ஹோலி கிராஸ் நகரிலுள்ள ஹேசில்டா மேரியின் தங்கியுள்ள அவரது தாய் வீட்டிற்குச் சென்ற யூஜின் மரிய ஸ்டாலின், வீட்டு வளாகத்திற்குள் திறுத்தப்பட்டிருந்த சுமார் 30 இலட்ச ரூபாய் மதிப்புள்ள 2 சொகுசு கார்களை பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துள்ளார். இதில் கார்களின் பெரும்பகுதி தீக்கிரையானது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஹேசில்டா மேரியின் குடும்பத்தினர் ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து யூஜின் மரிய ஸ்டாலினை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top