மாநகராட்சியானது நாகர்கோவில்!

மாநகராட்சியானது நாகர்கோவில்!

in News / Local

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 22–ந்தேதி நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாகர்கோவில் நகராட்சி, தமிழகத்தின் 14–வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.

அறிவித்தபடியே நேற்று சட்டசபையில் நாகர்கோவிலை மாநகராட்சியாக உயர்த்துவதற்காக மசோதா தாக்கல் செய்யப்பட்டு, இன்று குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில், நகராட்சியாகி 100வது வருடத்தில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோயில் நகராட்சி 52 வார்டுகளை கொண்டதும் அதிகமான வரிவசூல் கொண்டு தமிழகத்திலேயே முதன்மை நகராட்சியாக திகழ்ந்து வருகிறது. இந்நகருக்கு நாஞ்சில்நாடு என்ற பெயரும் உண்டு. ஸ்ரீ நாகராஜாவுக்கு திருக்கோயில் இவ்வூரில் அமைந்துள்ளதால் இவ்வூர் நாகர்கோவில் என அழைக்கப்படுகிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top