தேசியக்கொடி ஏற்றிய துப்பரவு பணியாளர் - அடுத்த தலைமுறையின் சமத்துவ சுதந்திர தினம்!

தேசியக்கொடி ஏற்றிய துப்பரவு பணியாளர் - அடுத்த தலைமுறையின் சமத்துவ சுதந்திர தினம்!

in News / Local

வடசேரி பகுதி இளைஞர்கள் நடத்திய சுதந்திர தின விழாவில் துப்பரவு பணியாளரை அழைத்து தேசியக்கொடி ஏற்ற செய்து நெகிழ்ச்சி அடைய செய்த சம்பவம் தூய்மை பணியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதை தொடர்ந்து இந்த நிகழ்வு துப்பரவு பணியார்களுக்கு உத்வேகத்தை தந்துள்ளதாக தூய்மை பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய திருநாட்டின் 74 வது சுதந்திர தினத்தில் இந்தியாவின் மூவண்ண தேசியக்கொடியை பிரதமர் மற்றும் முதல்வர்கள் கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட நிகழ்வுகள் ஆகஸ்ட்15 ம் நாள் நேற்று சிறப்பகாக நடைப்பெற்றது. பின்னர் தலைவர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அதே வேலையில் மாபெரும் தலைவர்களும் பெரிய பொறுப்புகளில் இருப்பவர்கள் செய்த புண்ணிய செயலை தற்போது அடுத்த தலைமுறையினர் புதிய கோணத்தில் சமத்துவத்தின் அடிப்படையில் தூய்மை பணியாளரை அழைத்து தாங்கள் நடத்திய சுதந்திர தினவிழாவில் தேசியக்கொடியை ஏற்ற செய்தது உழைப்பாளர்களை கெளரவித்துள்ளனர். வடசேரி 8வது வார்டுக்கு உட்பட்ட கொம்மண்டை அம்மன் கோவில் தெருவில் GANG STAR’Z இளைஞர்களின் செயலுக்கு சமூக ஆர்வலர்கள் இளைஞர்களை பாராட்டி வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top