யோகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய கொரானா மையம்.! அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்

யோகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய கொரானா மையம்.! அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்

in News / Local

கன்னியாகுமரி: குலசேகரம் யோகா மருத்துவக் கல்லூரியில் படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா மையத்தினை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

குமரி மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலை முழு ஊரங்கிற்கு பின்னரும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ,குலசேகரத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா மையம் புதிதாக அமைக்கப்பட்டது.

புதிதாக அமைக்கப்பட்ட கொரோனா மையத்தினை தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இதில் மருத்துவ கல்லூரி தலைவர் என்.ராதாகிருஷ்ணன் துணைத்தலைவர் சங்கர் ,முதல்வர் அனுஷாரெனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top