கன்னியாகுமரி மாவட்டத்தில்,மணியாச்சி முதல் நாகர்கோவில் வரை இரட்டை வழி இரயில் பாதை அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இப்பணியின் ஒரு கட்டமாக ஆரல்வாய்மொழி – குமாரபுரம் சாலையில் புதிய மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. இதனால் பழைய பாலத்தினை இடிக்கும் பணியானது இன்று காலை நடைபெற்றது.
இப்பணியில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் இரண்டு ராட்சத கிரேன் இயந்திரங்கள் மற்றும் துணை இயந்திரங்கள் வாயிலாக அகற்றப்பட்டது. தற்போது வழக்கமான முறையில் இப் பழைய பாலத்தினை அகற்றினால் தற்போதுள்ள இரயில் போக்குவரத்து பாதிப்பதுடன் இருப்பு பாதையும் அதிக அளவில் சேதமடையும், இதனை கருத்தில் கொண்ட தென்னக ரயில்வே நிர்வாகம், பழைய பாலத்தை அகற்ற நிர்வாக ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில் இரயில்வே விகாஸ் நிகாம் நிறுவன பொறியாளர்கள் பழைய பாலத்தினை புதிய இரட்டை வழிரயில் பாதைக்கு வசதியாக புதிய மேம்பாலம் உடனே அமைப்பதற்க்கு ஏதுவாக எந்தவொரு இடையூரும் இல்லாமல் அகற்றினர்.தமிழகத்திலேயே முதல் முறையாக அதிநவீன தொழில்நுட்ப முறையான ஒயர் கட் முறையில் பழைய பாலத்தினை அகற்றியது குறிப்பிடதக்கது.
இப் பழைய பாலத்தினை அகற்றும் பணியின் போது இரயில் விகாஸ் நிகாம் நிறுவன தலைமை முதன்மை திட்ட மேலாளர் கமலாக்க ரெட்டி, முதன்மை திட்ட மேலாளர் பத்மநாபன் ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் பொறியாளர்கள் நபிந்தரநாத் தாஸ், ஆனந்து, முத்துக்குமார் உள்ளிட்ட இரயில்வே பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments