ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு இஸ்ரோவில் இருந்து ஆக்சிஜன் வரவழைப்பு.!

ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு இஸ்ரோவில் இருந்து ஆக்சிஜன் வரவழைப்பு.!

in News / Local

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஐந்து டன் ஆக்சிஜன் இஸ்ரோவில இருந்து ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தது.

தமிழ்நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது இதனால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் உயிரிழப்புகளும் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதை தொடர்ந்து அவர்கள் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது இதை சரி செய்வதற்காக அவர்களுக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது .

ஆனால் தற்போது ஆக்ஸிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலையில் இருந்து வருகிறது இந்த நிலையில் மகேந்திரகிரி திரவ இயக்க உந்து மையத்தில் இருந்து 5 டன் ஆக்சிஜன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு நிரப்பப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் தேவைக்கேற்ப திருச்சி தனியார் நிறுவனத்திடம் இருந்தும் மகேந்திரகிரி மகேந்திரகிரி திரவ இயக்க மையத்திலிருந்தும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு வரவழைக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top