ஆண்மகன் என்று எனக்கு சான்று தாருங்கள் பிளீஸ் … கன்னியாகுமரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்த வாலிபர் . குமரியில் ருசிகரம்

ஆண்மகன் என்று எனக்கு சான்று தாருங்கள் பிளீஸ் … கன்னியாகுமரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்த வாலிபர் . குமரியில் ருசிகரம்

in News / Local

குமரி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் தன்னை ஒரு ஆண்மகன் என அறிவித்து சான்றிதழ் தரவேண்டும் என கூறி குமரி மாவட்ட ஆட்சியரிடம் வித்தியாசமான மனு கொடுத்தது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுகா பகுதி மருந்து கோட்டை , குமாரபுரம் என்ற இடத்தை சேர்ந்தவர் சந்தோசம் என்பவர் மகன் ஸ்டாலின் சிங் . எம் சி எ பட்டதாரி. கடந்த 2013 முதல் திருவனந்தபுரம் இன்போசிஸ் கம்பெனியில் பணிபுரிந்துள்ளார். திருமணமாகி இவருக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது

திருவனந்தபுரத்தில் வேலை பார்க்கும் போதே அவரை சக நண்பர்கள் திருநங்கை என்று கேலி செய்வார்களாம். இதனால் மனதளவில் பாதிப்பு ஏற்பட்டு வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது .

இந்த நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்ட கலெக்டரிடம் வாலிபர் ஸ்டாலின் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில், – தனக்கு திருமணம் ஆகி குழந்தை உள்ளது எனவும், என்னை சகநண்பர்கள் மற்றும் நான் பணியில் இருக்கும் இடத்திலும் திருநங்கை என பலபேர் தன்னை கிண்டல் செய்வதால் நான் மனதளவில் பாதிப்புக்கு ஆளாகி மருந்து சாப்பிடுகிறேன். எங்கு வேலைக்கு சென்றாலும் இந்த நிலை தொடர்கிறது .

ஆகவே என்னை கேலி கிண்டல் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், நான் ஒரு ஆண் மகன் என அறிவிப்பு வெளியிட வேண்டும் எனவும் புகார் அளித்தார் .

வாலிபரின் இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top