சென்னை அரும்பாக்கத்தில் இளம் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி லிவ்விங் டு கெதரில் வாழ்ந்த இளைஞர் திருமணத்துக்கு மறுத்த நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம்(24), இவர் வியாசர்பாடியை சேர்ந்த 22 வயது பெண்ணை காதலித்து வந்தார். இந்த நிலையில் ஸ்ரீராமின் தாயாருக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் அவரை பார்த்து கொள்ள காதலியை வீட்டிற்கு அழைத்து தங்க வைத்துள்ளார்.
இரண்டு மாதங்கள் ஸ்ரீராம் வீட்டில் இருக்கும் போது நாம் திருமணம் செய்து கொள்ளபோகிறோம் என ஆசை வார்த்தை கூறி கட்டாயமாக உடலுறவு கொண்டதாகவும், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி விட்டு தற்போது திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இளம் பெண் அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் திருமணம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியது தெரியவந்தது.
இதையடுத்து ஸ்ரீராம் மீது வழக்கு பதிவு செய்து கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments