அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

in News / Local

அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல்நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் மொத்தம் 200 பேருக்கு பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் நிர்த்திய கோபால் தாஸ் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

இதன் காரணமாக அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி டெல்லியில் இருந்து இன்று காலை புறப்பட்டார் . லக்னோ சென்ற பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டரில் அயோத்தி வந்தடைந்தார். அயோத்தி வந்த மோடியை தனிமனித இடைவெளியுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார்.

காரில் விழா நடைபெறும் இடத்திற்கு வந்த பிரதமர் மோடி முன்னதாக ஹனுமன் கர்கி கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார். அப்போது கொரோனா காலம் என்பதால் கைகளை கழுவிய மோடி வழிப்பாட்டுக்கு பிறகு கோயில் பிரகாரத்தை சுற்றி வந்தார்.

பின்னர் ராமஜென்ம பூமியில் உள்ள குழந்தை ராமர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார். பின்னர் அங்கு கோயில் வளாகத்தில் மரக்கன்றை நட்டார். தனிமனித இடைவெளியுடன் நடந்த இந்த நிகழ்வுகளின் போது மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனிருந்தார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top