கன்னியாகுமரியில் பிரதமர் மோடி 2-ந்தேதி பிரசாரம்

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி 2-ந்தேதி பிரசாரம்

in News / Local

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 2-ந்தேதி கன்னியாகுமரிக்கு வருகிறார். அவர் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

குமரி மாவட்டத்தில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வருகிற 2-ந்தேதி கன்னியாகுமரிக்கு வருகிறார். அவர் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

இதற்காக கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்படுகிறது. இதற்கான கால்கோள் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கால்கோள் பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு வருவதையொட்டி பாதுகாப்பு பணிகள் குறித்து டெல்லியில் இருந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்துக்கு சென்று பிரதமர் மோடி பேசும் இடத்தை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top