அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா! கொட்டாரம்   ஸ்ரீராமர் கோயிலில் சிறப்பு பூஜை!

அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா! கொட்டாரம் ஸ்ரீராமர் கோயிலில் சிறப்பு பூஜை!

in News / Local

உலகிலேயே மிகப்பெரிய கோவிலானது கம்போடியா ஹங்கோர்வாட் கோவிலாகும், இது 401 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இதற்கு அடுத்தபடியாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலாகும், இது 155 ஏக்கரில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக அயோத்தியில் உருவாகும் ஸ்ரீராமர் கோவில் 120 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட உள்ளது.

இந்த கோவிலின் நீளமும் அகலமும் உயரமும் 300 X 280 X 161 அடி என்கிற அளவில், 20 வருடத்திற்கு முன்னதாக வடிவமைக்கப்பட்ட வரைபடத்தில் இருந்து, தற்போது கட்டப்படும் உயரம் மட்டும் 20 அடி அதிகப்படுத்தி உருவாக்கப்படுகிறது. மூன்று தலமாக அமையவிருக்கும் இந்த கோவிலில், ஒவ்வொரு தளத்திலும் 106 தூண்கள் வீதம் 318 தூண்களை கொண்டு மிக ப்ரமாணடமாக அமைக்கப்பட உள்ளது.

பூமி பூஜை செய்யப்படும் இடத்தில் சேர்ப்பதற்காக இந்தியா முழுவதும் உள்ள புனிதத் தளங்களில் இருந்து மண் மற்றும் புனித நீர் ஆகிய தீர்த்தங்களும் அயோத்திக்கு அனுப்பப்பட்டுள்ளது.. இந்த கோவிலை கட்டி முடிக்க ரூ.300 கோடி செலவு செய்யப்பட்டுள்ள நிலையில், 20 ஏக்கர் பரப்பளவில் தேவையான வசதிகளை உருவாக்க ரூ.1000 கோடி வரையிலும் செலவாகும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

இதை தவிர விமான நிலையம், சாலை விரிவாக்கம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களையும் பிரதமர் மோடி அங்கு துவக்கி வைக்க உள்ளார். கோவில் கட்டி முடிக்க 3.5 வருடங்கள் அவகாசம் கோரப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவில் கட்டுவதற்க்காக பூமி பூஜை தற்போது அயோத்தியில் நடைபெற்று கொண்டிருக்கிறது, இதில் 135 சாதுக்கள் உட்பட 175 பேர் மட்டுமே பங்கேற்கின்றனர்.

அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறுவதையடுத்து கொட்டாரம் ஸ்ரீராமர் கோயிலில் இன்று காலைசிறப்பு பூஜை நடைபெற்றது. .வர சக்தி விநாயகருக்கு முதல் பூஜையுடன் தொடங்கி ,தொடர்ந்து ராமருக்கும்,ஆஞ்சநேயருக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது.பின்னர் இனிப்புகள் வழங்கப்பட்டது.இதில் கோயில் நிர்வாகிகள், பொதுமக்கள் ,பா.ஜ.க வினர் பங்கேற்றனர். குமரி மாவட்டத்தில் 1000 க்கும் மேற்ப்டட இடங்களில் இனிப்புகளை வழங்கி பா.ஜ.க வினர் இதனை கொண்டாடி வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top