நாகர்கோவில் வடசேரியில் உள்ள முத்தூட் பின்கார்ப் நிறுவனத்திற்கு எதிராக ஓய்வு பெற்ற அரசு ஊழியர் புகார்!

நாகர்கோவில் வடசேரியில் உள்ள முத்தூட் பின்கார்ப் நிறுவனத்திற்கு எதிராக ஓய்வு பெற்ற அரசு ஊழியர் புகார்!

in News / Local

நகைகளை அடகு வைத்த தன்னிடம் கந்து வட்டியைப் போல் வட்டி வசூலிக்க முயலும் வடசேரியில் உள்ள முத்தூட் பின்கார்ப் நிறுவனத்திற்கு எதிராக ஓய்வு பெற்ற அரசு ஊழியர் புகார் .

நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் வேதமுத்து (63) இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். வடசேரியில் உள்ள முத்தூட் பின்கார்ப் நிறுவனத்திற்கு எதிராக புகார் ஒன்றை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் ரிசர்வ் வங்கியில் புகார் அளித்துள்ளார்.

தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை என கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.

இதுகுறித்து கோட்டார் காவல்நிலையத்திலும் புகார் அளித்ததோடு கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top