கரும்பாட்டூரில் தளவாய்சுந்தரம், ஆஸ்டின் எம்.எல்.ஏ. முன்னிலையில் சாலைப்பணி தொடங்கியது!

கரும்பாட்டூரில் தளவாய்சுந்தரம், ஆஸ்டின் எம்.எல்.ஏ. முன்னிலையில் சாலைப்பணி தொடங்கியது!

in News / Local

அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கரும்பாட்டூர் ஊராட்சியில் பள்ளிக்கூட சாலை மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இதனை சீரமைக்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பொது நிதியில் இருந்து ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நிதி ஒதுக்கீடு செய்த பிறகும் சாலை பணிகள் தொடங்க படாமல் இருந்தது. சாலைப்பணியை உடனே தொடங்க ஆஸ்டின் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தி வந்தார். மழையால் தான் பணி தொடங்கப்படவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று சாலைப்பணி தொடங்கப்பட்டது.

இதை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், ஆஸ்டின் எம்.எல்.ஏ. ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் நீல பாலகிருஷ்ணன், மக்கள் தொடர்பு உதவி அதிகாரி சுஷ்மா, கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், அரசு ஒப்பந்தக்காரர் சுதா, பால்வள தலைவர் எஸ்.ஏ.அசோகன், யூனியன் தலைவர் அழகேசன், மாவட்ட கவுன்சிலர் நீல பெருமாள்,

ஒன்றிய கவுன்சிலர் பால் தங்கம், சாமிதோப்பு ஊராட்சி தலைவர் மதிவாணன், பேரூர் செயலாளர்கள் வக்கீல் கைலாசம், தாமரை தினேஷ், சீனிவாசன், கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி பொருளாளர் சுந்தர்சிங், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தங்க நாடார், ஒன்றிய மாணவரணி செயலாளர் தேவசுதன்,

பேரூராட்சி முன்னாள் தலைவி பொன்.பன்னீர்செல்வி, யூனியன் முன்னாள் தலைவர் பாலமுருகன், பேரூர் அவைத்தலைவர் முத்துக்குமார் மற்றும் பொன்சிவா, டென்னிஸ் மற்றும் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தாமரை பாரதி, வடக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன், பேராசிரியர் டி.சி.மகேஷ், பேரூர் செயலாளர்கள் வைகுண்ட பெருமாள், பாபு, பூவியூர் காமராஜ்,

கரும்பாட்டூர் ஊராட்சி தலைவி தங்கமலர் சிவபெருமான், ஊராட்சி கழக செயலாளர் மணி மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் நாஞ்சில் ஜோனி மோசஸ், பிரேம் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top