ஹவாலா பணம் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி... இருவர் அதிரடி கைது.!

ஹவாலா பணம் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி... இருவர் அதிரடி கைது.!

in News / Local

பள்ளியாடியில் ஹவாலா பணம் தருவதாக கூறி 18 லட்சம் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

குமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் ஜெபமணி(62) . இவர் அந்த பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். அப்போது அவர் கடைக்கு வந்த மணிகண்டன் (43) , மற்றும் ஜான் (38) ஆகியோர் ஜெபமணியிடம் பழக்கம் ஏற்படுத்தி தங்களிடம் ஹவாலா பணம் இருப்பதாகவும் ஒன்றுக்கு இரு மடங்காக தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.

இதனை நம்பிய ஜெபமணி மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து 18 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர் . பணத்தை கொண்டு வரும்போது போலீஸ் கெடுபிடி அதிகமாக உள்ளது என ரூபாயை வாங்கிவிட்டு ஏமாற்றியுள்ளனர் . பின்பு 40 லட்சம் பணம் தாருங்கள் மொத்தம் 1 கோடியாக திருப்பி தருகிறோம் என மணிகண்டன் மற்றும் ஜாண் மீண்டும் ஜெபமணியிடம் கூறியுள்ளனர் .

இதில் சந்தேமடைந்த ஜெபமணி மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரை தொடர்ந்து மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார் . அவரது உத்தரவின் பேரில் தக்கலை உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் சிவசங்கர் மற்றும் காவலர்கள் , மார்த்தாண்டம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்வேல் குமார் ஆகியோர் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

பின்னர் ஜெபமணியிடம் பணத்தை தருகிறோம் என கூறி குற்றவாளிகளை இருவரையும் வரவழைத்து சிராயன்குழி பகுதியில் வைத்து மணிகண்டன் மற்றும் ஜானை பிடித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர் . விரைந்து குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினரை மாவட்ட எஸ்.பி வெகுவாக பாராட்டினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top