5 கோப்புகளில் கையெழுத்து : தமிழகத்தின் நிரந்தர முதல்வராக மு.க.ஸ்டாலின் வலம் வருவார்; குமரி பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் புகழாரம்;

5 கோப்புகளில் கையெழுத்து : தமிழகத்தின் நிரந்தர முதல்வராக மு.க.ஸ்டாலின் வலம் வருவார்; குமரி பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் புகழாரம்;

in News / Local

கன்னியாகுமரி:

தமிழ்நாடு -முதலமைச்சராக நேற்று பதவியேற்ற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு உள்ளிட்ட 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.இந்த அறிவிப்பு அடித்தட்டு மக்களின் மூச்சு காற்றாய் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார் என்பதற்கு சான்றாகும் .இந்த தொடக்கம் ,அவர் தமிழகத்தின் நிரந்தர முதல்வராக வலம் வருவார் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது என குமரி மாவட்ட பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் ஆசியுடன் தமிழ்நாடு -முதலமைச்சராக பொறுப்பேற்ற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று 5 கோப்புகளில் கையெழுத்திட்டார் .
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது முதல்வர் பல்வேறு வாக்குறுதிகளை தமிழக மக்களிடம் அளித்திருந்தார் .

அவற்றில் ஆவின் பால் ஒரு லிட்டருக்கு ரூ.3 குறைப்பு , ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளுக்கு 100 நாட்களில் தீர்வு , நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் ,கொரோனா நிவாரணமாக ரூ.4000 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார் . நேற்று முதலமைச்சராக பொறுப்பேற்றதும் உடனடியாக முதல்வர் இந்த திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார் .

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மக்கள் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் இலவசமாக சிகிச்சை பெறலாம் என்றும் அறிவித்திருந்தார் .முதல் அமைச்சரின் இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு ஏழை எளிய மக்களிடையே கடும் வரவேற்பை பெற்றுள்ளது.

அடித்தட்டு மக்களின் மூச்சுக் காற்றாய் தளபதியார் அவர்கள் விளங்குகிறார் என்பதற்கு இதுவே சான்றாகும் .இந்த முதல் ஐந்து கையெழுத்தும் தமிழகத்தின் நிரந்தர முதல்வராக அவர் வலம் வருவார் என்பதற்கு சான்றாக விளங்குகிறது .இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top