நாகர்கோவில் மின்சார வாரியத்திற்கு சொந்தமான உதிரி பாகங்களை கடத்தி விற்பனை செய்யும் நபர் மீது புகார்

நாகர்கோவில் மின்சார வாரியத்திற்கு சொந்தமான உதிரி பாகங்களை கடத்தி விற்பனை செய்யும் நபர் மீது புகார்

in News / Local

குமரிமாவட்டம் நாகர்கோவில் பகுதியில் மின்சார வாரியத்திற்கு சொந்தமான உதிரி பாகங்களை கடத்தி விற்பனை செய்யும் நபர் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத மின்சார துறையின் முதற்நிலை பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டும் மின் உதிரி பாகங்கள் கடத்தல் ஆதாரங்களை அதிகாரியிடம் தெரிவித்திற்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து தனக்கு பாதுகாப்பு வழங்க கேட்டும் சமூக ஆர்வலர்கள் குமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பழவிளை பகுதியை சார்ந்த பாஸ்கரன் மற்றும் ஜெயக்கிருஷ்ணன் இவர்கள் இருவரும் மின்சார துறையின் உயர் அளுத்த மின் கம்பிகள் கொண்டு செல்லும் கோபுரங்கள் அமைக்கும் பணியினை அரசின் ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகின்றனர்.

அரசுக்கு சொந்தமான மின் உதிரிபாகங்களை இந்த இரண்டு ஒப்பந்தகாரர்களும் கூட்டாக சேர்ந்து வீடுகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததை ஆதாரங்களுடன் மின்சார வாரியம் நாகர்கோவில் பொறியாளரிடம் புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கை எடுக்காததால் குமரிமாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு அளித்துள்ளனர்.

மேலும் மின்சார உதிரி பாகங்கள் கடத்தல் சம்மந்தமாக மின்சார வாரியம் தெரிவித்த தகவலில் பழவிளை பகுதியில் எந்த விதமான மின்சார உதிரி பாகங்களும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதற்கு சமூக ஆர்வலர்கள் விடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் இருப்பதை ஆதாரங்களுடன் வெளியே கொண்டு வந்துள்ளதற்கு சமூக ஆர்வலர்களையும் அவர்களது குடும்பத்தையும் மிரட்டும் பழவிளை பகுதியை சார்ந்த பாஸ்கரன், ஜெயக்கிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மின் உதிரி பாகங்களை கடத்தி விற்பனை செய்வதாகவும் சமூக ஆர்வலர்கள் குமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top