மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதிய விபத்தில் மாணவன் பலி

மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதிய விபத்தில் மாணவன் பலி

in News / Local

மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதிய விபத்தில் மாணவன் பலியானார்.

இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தென்தாமரைகுளம் அருகே உள்ள கோவில்விளையை சேர்ந்தவர் யோசோப்பு (வயது 54), தேங்காய் உறிக்கும் தொழிலாளி. இவருக்கு 2 மகள்களும், சிமியோன் (19) என்ற மகனும் இருந்தனர். 

ஒரு மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. சிமியோன் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் தன்னுடைய தந்தையோடு வேலைக்கு சென்று வந்தார்.

சிமியோனும் பக்கத்து ஊரைச் சேர்ந்த கிண்ணிக் கண்ணன் விளையைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவரும் பள்ளி நண்பர்கள். நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் இருவரும் அப் பகுதியிலுள்ள ஒரு கோவிலில் கொடை விழா பார்க்க மோட்டார்  சைக்கிளில் சென்றனர். 

மோட்டார் சைக்கிளை சிமியோன் ஓட்டினார். விவேகானந்தன் பின்னால் அமர்ந்திருந்தார். நரியன் வளைவில் செல்லும் போது நிலை தடுமாறி அருகில் நின்ற மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இருவரையும் மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு நேற்று மாலை சிமியோன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். 

இந்த சம்பவம் குறித்து தென்தாமரைகுளம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜாண்கென்னடி வழக்குப்பதிவு செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top