ஓணம் பண்டிகையையொட்டி 30-ந்தேதி முழு ஊரடங்கில் தளர்வு அளிக்க வேண்டும் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வலியுறுத்த

ஓணம் பண்டிகையையொட்டி 30-ந்தேதி முழு ஊரடங்கில் தளர்வு அளிக்க வேண்டும் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வலியுறுத்த

in News / Local

குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் குமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஓணப்பண்டிகை வருகிற 31-ந் தேதி(திங்கட்கிழமை) வருகிறது. மேலும் 30-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழுஊரடங்கு அமலில் இருக்கும். இதனால் பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதில் சிக்கல் ஏற்படும். மேலும் ஓணப்பண்டிகை ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடப்படுவதால், 30-ந் தேதியன்று முழு ஊரடங்கை தளர்த்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top