சென்னை: வழக்கமாக கள்ளக்காதலனுக்காக கட்டிய கணவனையும், பெற்ற பிள்ளைகளையும் ஈவிரக்கமில்லாமல் கொல்லும் சில பெண்களை பார்த்திருப்போம்.. ஆனால், காயத்ரி சற்று வித்தியாசமானவர்.. இவர் கணவனை கொலை செய்ய முயன்ற நோக்கமும், செய்த விதமும் இன்றும்கூட நாகர்கோவில் மக்களை புரட்டி போட்டு வருகிறது.. இந்த வருடம் மறக்க முடியாத கொடூர பெண்களில் காயத்ரியும் ஒருவராவார்!
நாகர்கோவில், வெட்டூர்ணிமடம் அருகே கேவச திருப்பபுரத்தை சேர்ந்தவர் கணேஷ்.. இவர் ஒரு போட்டோகிராபர்.. 31 வயதான மனைவியின் பெயர் காயத்ரி.. 4 வயசில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று முன்தினம் கணேஷ் தூங்கி கொண்டிருந்தபோது, திடீரென 2 மர்ம நபர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்... அவரது தலையில் கத்தியால் வெட்டிவிட்டு, தப்பி ஓடியுள்ளனர்.. அப்போது கணேஷ் போட்ட சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து திரண்டு வந்து மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அவருக்கு மண்டை ஓடு பிளந்து கிடந்தது.. அதனால் உடனடியாக 3 நேரம் ஆபரேஷன் ஒன்று செய்யப்பட்டது.
அப்போதுதான் கணேஷின் ஆணுறுப்பு நசுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.. இதில், போலீசார் விசாரணையும் ஆரம்பமானது.. கட்டிலில் இருந்து கீழே விழுந்துவிட்டார் என்று காயத்ரி போலீசில் சொன்னதுதான், இந்த வழக்கில் முதல் க்ளுவாக கிடைத்தது.. கட்டிலில் இருந்து கீழே விழுந்தால் மண்டை உடையுமா? ஆணுறுப்பு எப்படி நசுக்கப்பட்டிருக்கும்? என்ற அடுத்தடுத்த கேள்விகளும் ஆரம்பமாகின.
இறுதியில் வசமாக சிக்கினார் காயத்ரி.. மதுரையை சேர்ந்தவர் காயத்ரி.. வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு பிளே ஸ்கூலில் டீச்சராக வேலை பார்த்து வந்திருக்கிறார். கல்யாணத்துக்கு முன்பே யாசின் என்பவரை காதலித்து வந்துள்ளார்.. வீட்டில் இந்த காதலை ஏற்கவில்லை.. உடனடியாக மாப்பிள்ளை பார்த்து கணேஷை கட்டி வைத்துவிட்டனர்.. இருந்தாலும் காயத்ரி யாசினுடன் தொடர்பிலேயே இருந்தார்.
ஒருகட்டத்தில் யாசின் தன் பக்கத்திலேயே இருக்க வேண்டும் என்று நினைத்து, ப்ளே ஸ்கூல் ஆரம்பிக்க முடிவு செய்து, அதற்காக கணேஷிடமே வீட்டு பத்திரத்தை நைசாக பேசி வாங்கி கொண்டார்.. 10 லட்சம் ரூபாய் புரட்டி யாசினுக்கு தந்தார்.. யாசின் பெயரில் ஸ்கூலும் ஆரம்பிக்கப்பட்டது. காயத்ரி அங்கு டீச்சரானார்.. இப்போது யாசினும், காயத்ரியும் சுதந்திரமாக ஊர் சுற்றினார்கள்.
ஒருநாள், ஒருநாள், தன் வீட்டு பத்திரம் குறித்து கணேஷ் பேச்செடுக்கவும்தான், விவகாரம் வெடித்தது.. கணேஷூக்கு சந்தேகம் வலுத்தது.. அப்போதுதான் கணவனை கொல்ல முடிவு செய்தார் காயத்ரி.. இதற்காக ஒரு கூலிப்படைக்கு 2 லட்சம் தந்து அழைத்து வந்தனர்... சம்பவத்தன்று கணேஷ் தூங்கிய நேரம், யாசினுக்கும், கொலை கும்பலுக்கும் தகவல் சொன்னார் காயத்ரி.. கதவை திறந்து வைத்து, கூலிப்படையை உள்ளே வரவழைத்துள்ளார்.. மேலும் வீட்டின் பின்புற கதவை திறந்து வைத்துவிட்டு எதுவுமே தெரியாததுபோல் கணவன் பக்கத்திலேயே படுத்து கொண்டார்.
இதற்கு பிறகுதான் கணேஷின் மண்டை பிளக்கப்பட்டுள்ளது.. தலையில் கத்தியால் வெட்டினர்.. வேறொரு பெண்ணுடன் தவறான உறவு காரணமாகவே இந்த கொலை நடந்திருப்பதுபோல, ஆணுறுப்பையும் நசுக்கிவிட்டுள்ளனர்.. கடைசியில் "ஐயோ, காப்பாத்துங்க" அலறி கூச்சல் போட்டதே காயத்ரிதான். ரத்தவெள்ளத்தில் கணேஷ் அலறி துடிக்கும்வரை காயத்ரி அங்கேயே கட்டிலில்தான் படுத்து கொண்டிருந்திருக்கிறார்.. கணேஷ் சுருண்டு விழுந்ததுமே லைட் போட்டு பார்த்துள்ளார்.
அப்போதுதான் கணவன் சாகவில்லை என்பது தெரிந்து ஷாக் ஆகிவிட்டாராம்.. அதனால் உடனே கள்ளக்காதலனுக்கு போன் செய்து, "இன்னும் சாகலையே, உயிர் இருக்கு" என்று சொல்லி உள்ளார். அதற்கு பிறகும் உயிர் பிரிந்துவிடும் என்று விடிய விடிய பார்த்து கொண்டே இருந்தார் காயத்ரி.. ஆனால், ரத்த வெள்ளத்தில் கணேஷ் துடித்து கொண்டே இருக்கவும்தான் வேறு வழியில்லாமல், கட்டிலில் இருந்து கணவன் கீழே விழுந்துவிட்டதாக சொல்லி ஒப்பாரி வைத்து ஊரை கூப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணையில் குற்றவாளிகள் கைதானாலும், இந்த கொலை முயற்சியில் காயத்ரியின் அணுகுமுறை அதிர்ச்சியாக உள்ளது.. 31 வயது பெண்ணுக்கு எப்படி இந்த அளவுக்கு குரூரம் இருக்க முடியும்? பொறுமையாக ஒரு கொலையை செய்ய முடியுமா? என்ற கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கின்றன!
0 Comments