சித்திரை விஷூவை முன்னிட்டு பூக்கள் விலை கிடு, கிடு உயர்வு

சித்திரை விஷூவை முன்னிட்டு பூக்கள் விலை கிடு, கிடு உயர்வு

in News / Local

தோவாளை மார்க்கெட்டில் சித்திரை விஷூவை முன்னிட்டு பூக்கள் விலை கிடு, கிடு வென உயர்ந்தது. பிச்சி கிலோ ரூ.1,750-க்கு விற்பனையானது.

நாகர்கோவில் அருகே தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு உள்ளூர், வெளியூர் மட்டுமன்றி பிற மாவட்டங்களிலிருந்தும் பூக்கள் வந்து குவிகின்றன. குறிப்பாக ஓசூர், சேலம், ராயக்கோட்டை, நிலக்கோட்டை, மதுரை மற்றும் அண்டை மாநிலமான பெங்களூருவில் இருந்தும் வாகனங்கள் மூலம் தோவாளை மார்க்கெட்டுக்கு பூக்கள் கொண்டு வரப்படுகின்றன.

இந்த பூக்களை வாங்க வியாபாரிகள் அதிகாலையிலேயே வந்து விடுவார்கள். இதனால் பூ மார்க்கெட் தினமும் களை கட்டும். பூக்கள் அதிக வரத்து இருக்கும் காலங்களில் பூக்களின் விலை மிக குறைந்தும், பூ வரத்து குறைவாக இருக்கும் போதும் மற்றும் முக்கிய பண்டிகை காலங்களிலும் பூக்கள் விலை உயர்ந்தும் இருக்கும்.

இன்று (புதன்கிழமை) சித்திரை விஷூ பண்டிகை. குமரி மாவட்டத்தில் விஷூ பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதனால் நேற்று பூக்களின் விலை கிடு, கிடு வென உயர்ந்தது. அதாவது ரூ.850-க்கு விற்பனையான ஒரு கிலோ பிச்சி ரூ.1,750 ஆகவும், ரூ.800-க்கு விற்பனையான முல்லை ரூ.1,750 ஆகவும் விற்கப்பட்டது.

மற்ற பூக்களின் விலை விவரம் கிலோவுக்கு வருமாறு:-

மல்லிகை ரூ.500, அரளி ரூ.200, கனகாம்பரம் ரூ.500, சம்பங்கி ரூ.150, வாடாமல்லி ரூ.50, துளசி ரூ.30, தாமரை 100 எண்ணம் ரூ.500, கோழிப்பூ ரூ.50, பச்சை ஒரு கட்டு ரூ.8, பாக்கெட் ரோஜா ரூ.40, பட்டன் ரோஸ் ரூ.180, ஸ்டெம்பு ரோஸ் ரூ.150, மஞ்சள் கேந்தி ரூ.45, சிவப்பு கேந்தி ரூ.50, சிவந்தி மஞ்சள் ரூ.200, மருக்கொழுந்து ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. அப்படியும் வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு பூக்களை வாங்கி சென்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top