குமரி அருகே  தனியார் மருத்துவமனையில்  குழந்தை பிரசவித்த இளம்பெண் பலி.  உறவினர்கள் போராட்டம்.

குமரி அருகே தனியார் மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த இளம்பெண் பலி. உறவினர்கள் போராட்டம்.

in News / Local

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் கல்லூரி சாலையை சேர்ந்தவர் சுரேஷ்குமார் இவர் சிங்கப்பூரில் உள்ள தனியார் சிவில் இன்ஜினியரிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் பவித்ரா (26) என்ற இளம்பெண்ணும் கடந்த 11 மாதங்களுக்கு காதல் திருமணம் முடிந்ததது. நிறைமாத கர்ப்பிணியான பவித்ரா கொட்டாரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு பிரசவ வலி எடுத்த பவித்ராவுக்கு சுகபிரசவம் முலம் பெண்குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்டு உள்ளது.

தீவிர சிகிச்சை அளித்தும் முன்னேற்றம் இல்லாததால் கன்னியாகுமரியில் உள்ள இன்னொரு தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.

அங்கு பவித்ராவை பரிசோதித்த டாக்டர்கள் வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறியதையடுத்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

கொட்டாரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாகவே பவித்ரா இறந்ததாக கூறி குடுபத்தினர் மற்றும் அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், ஒன்றிய செயலாளர் தாமரைபாரதி,பேரூர் செயலாளர் வைகுண்டபெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவலறிந்து அங்கு வந்த கன்னியாகுமரி காவல் ஆய்வாளர் ஆவுடையப்பன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

1 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top