குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் குமரி மாவட்டம் களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரன் திரித்துவபுரம் பகுதியில் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும் படி இருசக்கர வாகனங்களில் வந்த வாலிபர்களை விசாரணை செய்தனர்.அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் ,வாலிபர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.
சோதனையில் அவர்களிடம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கபட்டது.பின்னர் களியக்காவிளை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் நடத்திய விசாரணையில் அவர்கள் களியக்காவிளை பகுதியை சேர்ந்த யாசர் (25) ,முஸ்தபா (30) அர்ஷாத் (20) ஆகியோர் என்பது தெரியவந்தது.தொடர்ந்து அவர்கள் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
0 Comments