குமரிமாவட்டத்தில் பெருகிவரும் கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க மதுக்கடைகளை மூட கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குமரி மாவட்டத்தில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தேங்காய்பட்டணம், குளச்சல், இரவிபுதூர்கடை, சுவாமியார் மடம், தக்கலை, திருவிதாங்கோடு, மாதவலாயம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆகிய இடங்களில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் கூறுகையில், குமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
கடற்கரை கிராமங்களில் தொடர்ந்து பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதற்கு டாஸ்மாக் கடைகளை முக்கிய காரணமாகும். எனவே குமரி மாவட்டத்தில் தொடர்ந்து வேகமாக பரவும் கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும். இதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றனர்.
0 Comments