குஜராத் அகமதாபாத்தில் தீ விபத்தில் இறந்தவர்களில் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி : பிரதமர் மோடி..!

குஜராத் அகமதாபாத்தில் தீ விபத்தில் இறந்தவர்களில் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி : பிரதமர் மோடி..!

in News / Local

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் திடீர் தீ விபத்தால் 8 பேர் பலியாகியுள்ளனர். நவுராங்பூரா மாவட்டம் ஷ்ரே என்ற மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அங்கு தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், “அகமதாபாத் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். மீட்பு பணிகள் குறித்து முதல்வர் விஜய் ரூபானியை தொடர்பு கொண்டு பேசினேன்.

குஜராத் மருத்துவமனை தீ விபத்தில் இறந்தவர்களில் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும். மருத்துவமனை தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top